என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வசந்தகுமார் எம்எல்ஏ"
தமிழக காங்கிரஸ் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வசந்தகுமார் எம்.எல்.ஏ. இன்று நெல்லை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் காங்கிரசை வளர்க்கும் முயற்சியில் மாநிலத்தலைவர் அழகிரி உள்ளிட்ட அனைவரும் ஈடுபட்டுள்ளோம். இதையடுத்து வருகிற 19-ந் தேதி திருச்சியில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது, வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்துகிறோம். அதில் மாநில தலைவர் அழகிரி, மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
தமிழக காங்கிரசில் அனைவரும் இணைந்து செயல்படுவோம். தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை இடம் என்பது குறித்து ராகுல்காந்தி முடிவு செய்வார். காங்கிரசுக்கு 16 தொகுதிகள் எதிர்பார்க்கிறோம். இதில் கூடுதலாகவும் கிடைக்கலாம். குறைவாகவும் கிடைக்கலாம். வெற்றி ஒன்றே எங்கள் குறிக்கோள்.
நெல்லை, குமரி, விருதுநகர், திருச்சி, கோவை உள்ளிட்ட வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை எதிர்பார்க்கிறோம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் குமரி தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்றேன். இந்த முறை குமரி அல்லது நெல்லை தொகுதியில் போட்டிட விருப்பம் தெரிவித்துள்ளேன்.
எங்களை பொறுத்தவரை ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். 100 சதவீதம் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை நிறுத்துவோம்.
இலங்கை தமிழர்களுக்கு அதிக நன்மை செய்த கட்சி காங்கிரஸ். ஏற்கனவே இலங்கையில் போர் நடந்த போது உணவின்றி தவித்த தமிழர்களுக்கு விமானம் மூலம் உணவு அளித்தவர் ராஜீவ்காந்தி.
தற்போது தமிழக அரசு ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அ.தி.மு.க.வினர் பட்டியலின்படியே வழங்கப்படுவதாக தகவல் வந்துள்ளது. இது தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட திட்டம். இதில் கட்சிபாகுபாடின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும். மத சார்பின்மையை வலியுறுத்தியே காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம்.
காங்கிரஸ் ஆண்ட 10 ஆண்டுகளில் தீவிரவாதிகள் தாக்குதலால் 120 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் பா.ஜ.க.ஆளும் இந்த நான்கரை ஆண்டுகளில் 1800 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உளவுத்துறை எச்சரித்தும் மத்தியஅரசு கவனக்குறைவாக இருந்துள்ளது. இதன்மூலம் ஆட்சி நடத்த தகுதியற்ற கட்சியாக பா.ஜ.க. உள்ளது. இந்த சம்பவத்திற்கு மத்தியஅரசு தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர் தமிழகம் வரஉள்ளனர். வாய்ப்பிருந்தால் சோனியா காந்தியும் பிரசாரத்தில் கலந்து கொள்வார். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 90 சதவீத வடஇந்தியர்கள் பணியில் உள்ளனர். இந்தநிலை மாறவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #DMK #Vasanthakumar
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார் பட்டியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் வசந்த குமார் எம்.எல்.ஏ. ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியில் இதுவரை புதியதாக யாரும் நியமனம் செய்யவில்லை. விரைவில் அறிவிப்பு வரும்.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி, மோடியை கட்டி தழுவியது அன்பின் வெளிப்பாடு. மோடியை எதிர்க்க வேண்டும், நாட்டு மக்களையும், வியாபாரிகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைக்க உள்ளோம். தி.மு.க., காங்கிரஸ் உறவு நிலையானது.
தூத்துக்குடி விவகாரத்தில் அரசு எச்சரிக்கையாக இருந்தால் 13 உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.
இவ்வாறு அவர் கூறினார். #pmmodi #vasanthakumarmla
காங்கிரஸ் கட்சியின் மாநில வர்த்தக பிரிவு சார்பில் திருப்பூர் குளத்துபுதூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாநில பொது செயலாளர் ராயல் தர்மதுரை தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாநில தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அனைத்து கட்சிகளும் இணைந்து மக்களுக்கு எதிராக இருந்து வரும் பா.ஜனதா கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைப்போம். காவிரி பிரச்சனையில் தமிழக மக்களுக்கு ஆதரவாகவே காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரு மாநில முதல்-அமைச்சர்களும் அமர்ந்து கலந்தாலோசனை செய்து தேவையான தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி.யால் தமிழகம் வேதனையையே அனுபவிக்கிறது.
கோவை, திருப்பூர், அம்பத்தூர், ராணிபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றுவதாக இருந்தால் யாரும் எதிர்க்கமாட்டார்கள். தேவையற்ற திட்டங்களை மட்டுமே மக்கள் எதிர்க்கின்றனர்.
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வது வரவேற்கத்தக்கது. ஆனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதத்தை கொடுத்துவிட்டு பின்னர் பணிகளை தொடங்கட்டும். விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர்கள் சத்தியமூர்த்தி, ராஜாமுருகன், நிர்வாகிகள் முருகன், மெட்டல் மாதவன், பிரகாஷ், நடராஜ், குணசேகரன், கருப்பசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்